எனக்கு தெரியாமல் உடலை எரித்துவிட்டனர் - கொல்லப்பட்ட சூலூர் சிறுமியின் தாய் பரபரப்பு பேட்டி

சிறுமியின் பக்கத்து வீட்டில் இருந்த இருவரே இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
எனக்கு தெரியாமல் உடலை எரித்துவிட்டனர் - கொல்லப்பட்ட சூலூர் சிறுமியின் தாய் பரபரப்பு பேட்டி
Published on

கோவை, சூளூரில் 10 வயது சிறுமி இருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

குளத்தில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் இருந்த இருவரே இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிறுமியின் உடலை தனக்கு தெரியாமல் தகனம் செய்துவிட்டதாக தாய் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடலை என் கண்ணில் கூட காட்டவில்லை.

எனக்கே தெரியாமல் குழந்தையின் உடலை அவரது தந்தை வாங்கி, சொந்த ஊரான சேலத்திற்கு நான் செல்வதற்குள் உடலை எரியூட்டி விட்டனர். எங்களுக்கு நீதி வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மகளின் உடலை வாங்க மருத்துவமனையில் தான் கையெழுத்திடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com