
233 எம்எல்ஏக்களில் சிவி சண்முகத்தை தவிர மற்ற 232 எம்எல்ஏக்களும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
விடுபட்ட நபர் நாளையும் எம்எல்ஏவாக பதவியேற்கலாம் என தற்காலிக சபாநாயகர் கருப்பையா கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 234 நபர்களில் இன்று 232 பேர் எம்எலஏக்களாக பதவியேற்றனர்.
தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இன்றைய சட்டசபை நிகழ்வுகள் நிறைவுப்பெற்றுள்ள நிலையில், நாளை காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி தொகுதி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றவரும், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக பதவி ஏற்றார்.
வெற்றிச் சான்றிதழை எடுத்து வராததால் பதவி ஏற்காமல் சென்ற நிலையில் தற்போது சான்றிதழுடன் வந்து கீர்த்தனா.
இதேபோல், கே.சி.கருப்பணன் உள்ளிட்ட பிற எம்எல்ஏக்களும் தாமதமாக பதவி ஏற்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் தமிழக முதலமைச்சர் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
தற்போது வரை 203 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுள்ளனர்.
திண்டிவனம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற விசிக வன்னி அரசு எம்எல்ஏவாக பதவியேற்றார்.
முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு விருத்தாசலம் எம்எல்ஏவும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், கஜானா காலியாக இருக்கிறது என முதலமைச்சர் விஜய் பேசியது தொடரபான கேள்விக்கு இது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி என பிரேமலதா பதில் அளித்துள்ளார்.
விஜய் தலைமையிலான ஆட்சி எப்படி இருக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
குடியாத்தம் (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கே.சிந்து பதவியேற்றார்.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வி.எஸ்.பாபு பதவியேற்றார்.
சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்!- ஐஜேகே தலைவர் பாரிவேந்தர்
ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் தனது எக்ஸ் தள பக்கத்தில்," தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள இளவல் விஜயின் தலைமையில் பதவியேற்றுள்ள மாநில அமைச்சரவை உறுப்பினர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுன், Dr அருண் ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல் குமார், Dr பிரபு, ராஜ் மோகன், செல்வி. கீர்த்தனா ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
தமிழக மக்களின் முன்னேற்றம், நலன் மற்றும் வளமான எதிர்காலத்திற்காக தங்கள் அனைவரின் சேவையும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்" என்றார்.
முதலமைச்சர் விஜய்க்கு இன்று காலை முதல் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் தாஹிரா.
சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் மு.தமிமுன் அன்சாரி.
விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்ற தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ.-வாக பதவி ஏற்றுக்கொண்டார்.
எம்எல்ஏக்கள் பதவியேற்பு முடிந்த உடன் ஸ்டாலினை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்.
திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் விஜயை நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ.-வாக பதவியேற்கவில்லை. பதவியேற்க அழைத்தபோது சிவி சண்முகம் சட்டசபையில் இல்லை. சட்டசபைக்கு வந்த சிவி சண்முகம் பாதியிலேயே புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தருமபுரி தொகுதியில் வெற்றி பெற்ற பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி எம்எல்ஏவாக பதவி ஏற்றார்.
2 அணிகளாக சட்டமன்றம் வந்த அதிமுக (அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இரு அணியினராக சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர்)
தமிழ்நாடு சட்டசபை சபாநாயகருக்கான தேர்தலில் தவெகவைச் சேர்ந்த ஜே.சி.டி பிரபாகர் போட்டியிடுகிறார்.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் கனிமொழி சந்தோஷ்.
முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மரியாதை நிமித்தமாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை அண்ணாநகர் இல்லத்திற்கு நேரில் சென்று சந்திக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் எஸ்.ரகுபதி.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் மெய்யநாதன்.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் தங்கம் தென்னரசு.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ச.சி.சிவசங்கர்.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் கே.சி.வீரமணி
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் கே.என்.நேரு.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ஐ.பெரியசாமி.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் சி.விஜயபாஸ்கர்.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் எ.வ.வேலு.
எஸ்.பி.வேலுமணி பதவியேற்றபோது அதிமுக எம்எல்ஏக்களில் மற்றொரு குழுவினர் டேபிளை தட்டி வரவேற்றனர்.
எம்எல்ஏவாக பதவியேற்க வந்தவர்களில் இருவர் வெற்றிச் சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்க முடியவில்லை.
அமைச்சர் கீர்த்தனா, கே.சி.கருப்பணன் ஆகியோர் வெற்றிச் சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்க முடியவில்லை.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் கே.பி.அன்பழகன்.
துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்று கொண்டார் சேகர்பாபு.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி.
அமைச்சர் ராஜ்மோகன் எம்எல்ஏவாக பதவியேற்றபோது முதல்வரை கைகாட்டி கடவுள் அறிய எனக்கூறி உறுதிமொழி வாசித்தார்.
காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு பதவியேற்றார்.
மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் வெங்கடரமணன் எம்எல்ஏவாக பதவியேற்றார்.
தவெக அமைச்சரவையில் இடம்பறெ்ற 9 அமைச்சர்களில் 8 பேர் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றனர்.
தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா, எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்கவில்லை.
இதனால், பிற அமைச்சர்களுடன் அவர் உறுப்பினராக பதவியேற்க முடியாமல் போனது. சான்றிதழை கொடுத்த பிறகு பதவியேற்றுக் கொள்வார் எனத் தகவல்.
முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அமைச்சர்களை தொடர்ந்து பிற எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர்.
திமுக சார்பில் போட்டியிட்டு போடி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக பதவியேற்றார்.
எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார்.
திமுக சட்டமன்றக் குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார்.
தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார்.
தமிழக அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதவியேற்றார்.
சென்னை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அமைச்சர் ராஜ்மோகன் பதவியேற்றார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டார்.
17வது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், தற்காலிக சட்டசபைத் தலைவர் கருப்பையா உரையாற்றினார்.
அப்போது,"இன்னல்கள் இருந்தாலும் தவிடு பொடியாக்கி தகர்த்தெழுந்து தமிழ்நாட்டில் முதலமைச்சராகி உள்ளார் விஜய்.
இளைஞர்களின் எழுச்சி நாயகன், நாடு முழுவதும் உச்சரிக்கும் மூன்றெழுத்து மந்திரம் முதல்வர் விஜய்" என்றார்.
தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17வது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து முதல் சட்டசபை கூட்டத்தொடர் கூடியது.
சட்டசபைக்கு வருகை தந்த பாமக எம்.எல்.ஏ.க்கள்
சட்டப்பேரவைக்கு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடன் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி.
எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தனியாக வருகை தந்தனர்.
#WATCH | Chennai | AIADMK General Secretary Edappadi Palaniswami arrives at the State Assembly for the Tamil Nadu Legislative Assembly session.
— ANI (@ANI) May 11, 2026
The newly elected Members will take the oath today. pic.twitter.com/41GSYIA0Oa
தமிழக சட்டசபைக்கு திமுக சட்டமன்றக் குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அறையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
#WATCH | Chennai, Tamil Nadu: DMK MLA Udhayanidhi Stalin arrives at the State Assembly for the Tamil Nadu Legislative Assembly session. The newly elected Members will take the oath today.
— ANI (@ANI) May 11, 2026
Udhayanidhi Stalin was elected as the Leader of the DMK Legislature Party yesterday. pic.twitter.com/ZoIB6R1Htq
சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டசபைக்கு வருகை தந்துள்ளார்.
#WATCH | Chennai, Tamil Nadu: Chief Minister C Joseph Vijay arrives at the State Assembly for the Tamil Nadu Legislative Assembly session.
— ANI (@ANI) May 11, 2026
The newly elected Members will take the oath today. pic.twitter.com/bJBbGUAWaY
தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு உறுதிமொழி எடுக்க உள்ளனர்.
மேலும் நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.
எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணத்தை இன்று சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா செய்து வைக்க உள்ளார்.