என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    என் பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்த கூடாது- ராமதாஸ்
    X

    என் பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்த கூடாது- ராமதாஸ்

    • கட்சிக்காக நான் உழைத்ததை எத்தனை முறை சொல்லி காட்ட வேண்டியுள்ளது.
    • தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கட்சிக்கு சொந்தம் கொண்டாடி இருவரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். ஆனால் தேர்தல் ஆணையம் 2026 ஆகஸ்டு மாதம் வரை அன்புமணி தான் பா.ம.க. தலைவர் என கூறியது. தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராமதாஸ் தரப்பிரனர் டெல்லி தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கட்சிக்காக நான் உழைத்ததை எத்தனை முறை சொல்லி காட்ட வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம். இதில் சம்பந்தமே இல்லாமல் பொய்மூட்டைகளுடன் அன்புமணி தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளது.

    கட்சி எங்களுக்கே என்று சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது. கட்சி எங்களுக்கு இல்லை சொல்ல எனக்கு ஒரு பிள்ளை. தேவையென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும். இனி என் பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்த கூடாது. அதற்கு அவருக்கு உரிமை இல்லை. என் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது தொடர்பாக புகார் அளித்து எந்த வித நடவடிக்கையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×