என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நயினார் நாகேந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் இ.பி.எஸ்.
- அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று பிறந்தநாள் காணும் பா.ஜ.க. மாநில தலைவர், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.
Next Story






