போதை இல்லா தமிழ்நாடு..!- WE THE LEADERS மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மாநாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது.
Annamalai
Published on

பொள்ளாச்சியில் நடைபெற்ற அண்ணாமலையின் WE THE LEADERS அமைப்பன் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

உறுதிமொழி ஏற்பு

போதை பொருள் பயன்படுத்த மாட்டோம்.

யாரையும் பயன்படுத்த விட மாட்டோம்.

கல்வி நிலையங்கள் அருகே போதை பொருள் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதை பொருள் ஒழிக்க குழு அமைக்க வேண்டும்.

விதிமீறல்கள் ஈடுபடும் FL2 பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பார்கள் அனுமதிக்க கூடாது.

தமிழ்நாட்டில் இன்னும் கோயில், கல்வி நிலையங்கள் அருகே டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. அதை மீண்டும் அரசு மூட வேண்டும்.

தொழிலாளர்கள் காலை நேரத்தில் கள்ள சந்தையில் டாஸ்மாக் விற்பனை தடுக்க வேண்டும்.

மறுவாழ்வு மையங்கள் சீர்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் போதை பொருள் தடுப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். முதல் மாநிலமாக மாற்ற 5 ஆண்டுக்கு திட்டம் கொண்டு வர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாடல்

அண்ணாமலையின் WE THE LEADERS அமைப்பின் மாநாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com