

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 2.47 லட்சம் விளை நிலங்கள் பவானிசாகர் அணை மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது. மொத்தம் 105 கன அடி கொண்டது பவானிசாகர் அணை. அணையின் முழு நீர்த்தேக்க பரப்பு 30 சதுர மைல் ஆகும்.
கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு அதிக அளவில் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 55.37 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 173 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கண்ணாடி என மொத்தம் 850 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.
இதைப்போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.55 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 22.41 அடியாகவும், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 15.81 அடியாகவும் சரிந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.