கரூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

விபத்தில் 3 பேர் பலியான நிலையில் 3 வயது குழந்தை, பைக்கில் சென்ற 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
Published on

கரூர் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் லாரியின் அடியில் சிக்கிய கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில் காரில் சென்ற அரவிந்த், ஜனனி, ஓட்டுநர் பலியாகினர்.

சாலையை கடக்க வந்த பைக் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது நிலைதடுமாறி சாலையோரம் நின்றிருந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் 3 பேர் பலியான நிலையில் 3 வயது குழந்தை, பைக்கில் சென்ற 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com