என் மலர்

  தமிழ்நாடு

  மேலூர் அருகே இளம்பெண் எரித்துக்கொலை- பலாத்காரம் செய்யப்பட்டாரா?
  X

  மேலூர் அருகே இளம்பெண் எரித்துக்கொலை- பலாத்காரம் செய்யப்பட்டாரா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொலை செய்யப்பட்ட பெண் நீலநிற சுடிதார் மற்றும் கொலுசு அணிந்திருந்தார்.
  • பெண் தென்னந்தோப்பில் பிணமாக கிடந்ததால், அவரை எங்கிருந்தாவது அழைத்து வந்து பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

  மேலூர்:

  மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பள்ளப்பட்டியில் கொட்டப்பட்டி செல்லும் சாலையில் இருக்கும் தென்னந்தோப்பில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இன்று பிணமாக கிடந்தார். அந்த பெண்ணின் முகம் உள்ளிட்ட பகுதிகள் எரிந்த நிலையில் இருந்தது.

  இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

  அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. நீலநிற சுடிதார் மற்றும் கொலுசு அணிந்திருந்தார். மேலும் அவரது கழுத்தில் காயம் இருந்தது. அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, உடலை தீ வைத்து எரித்துள்ளனர்.

  ஆனால் அவரை கொன்ற கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. அந்த பெண் தென்னந்தோப்பில் பிணமாக கிடந்ததால், அவரை எங்கிருந்தாவது அழைத்து வந்து பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

  அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

  இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்ததும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

  கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரை கொன்ற கொலையாளிகளை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

  அவர்கள் அங்கு எரிந்த நிலையில் கிடந்த செல்போன் ஒன்றை மீட்டனர். அது கொல்லப்பட்ட பெண்ணின் செல்போனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காணாமல் இருப்பதற்காக அவரது முகம் மற்றும் செல்போனை கொலையாளிகள் தீ வைத்து எரித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

  செல்போன் முற்றிலும் எரிந்து விட்டதால் அதிலிருந்து எந்த தகவலையும் போலீசாரால் சேகரிக்க முடியவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது தென்னந்தோப்பில் இருந்து சிறிது சென்றதும் நின்று விட்டது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை போலீசார் பிரேத பரிசோதனை செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதை கண்டறிந்தால் கொலையாளிகள் பற்றிய விபரம் தெரிந்து விடும். இதனால் அந்த பெண் யார்? என்பதை கண்டறியும் நிகழ்ச்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  தென்னந்தோப்பில் இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் மேலூர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×