search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்காத மர்மம்
    X

    உதயநிதி ஸ்டாலின்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்காத மர்மம்

    • உதயநிதி முழு நேர அரசியலில் இறங்கி இளைஞர் அணியை பலப்படுத்தி வந்தார்.
    • உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று வெளிப்படையாக சில அமைச்சர்கள் பேச ஆரம்பித்தனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி சினிமா உலகில் தீவிர கவனம் செலுத்தியபோது அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் இருந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவரது பிரசார சுற்றுப்பயணம் வெற்றியை கொடுத்தது. இதைத்தொடர்ந்து முழு நேர அரசியலில் இறங்கி இளைஞர் அணியை பலப்படுத்தி வந்தார்.

    இந்த சமயத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அவர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். தொகுதியில் மக்கள் பணியாற்றி வருகிறார்.

    சட்டமன்றத்தில் அவர் பேசும்போதும், வரும் போதும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அவருக்கு அதிக மரியாதை, முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.

    இன்னும் ஒருபடி மேலாக உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று வெளிப்படையாக சில அமைச்சர்கள் பேச ஆரம்பித்தனர். இதனால் உதயநிதி விரைவில் அமைச்சராகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

    அமைச்சர் பதவி கொடுப்பதற்கு முன்பு அதற்கேற்ப பயிற்சிகளை பெற்று, தன்னை மேலும் அவர் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருதுவதாக சொல்கிறார்கள். மேலும் உதயநிதி அமைச்சராகி விட்டால் அவருக்கு கட்சிகாரர்கள் கூடுதல் மரியாதை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். எந்த ஊரில் கட்சி நிகழ்ச்சிகள் நடந்தாலும் உதயநிதியை அழைத்து விழா நடத்துவார்கள். இதில் சுமூக நிலை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனாலேயே இப்போதைக்கு உதயநிதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பதவி வழங்காமல் உள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறினார்கள்.

    Next Story
    ×