என் மலர்

  தமிழ்நாடு

  மருத்துவமனை சிகிச்சைக்கும், வீட்டிற்கும் இடையே பாலமாகத் திகழும் டிரான்ஸிஷன் கேர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குணமடைந்து இயல்பு நிலைக்கு மீண்டு வருவதற்கு மிக இன்றியமையாததாகும்.
  • டிஸ்சார்ஜ்-க்குப் பிறகான மருத்துவ சேவையுடன் கூடிய பூரண குணமடைதலுக்கும் இடைப்பட்ட காலகட்டமே டிரான்ஸிஷன் கேர் (இடமாற்ற சிகிச்சை பராமரிப்பு)
  • அதுல்யா சீனியர் கேர் வழங்கும் மூத்த குடிமக்களின் முழுமையான தேவைக்கான சேவை

  மருத்துவமனைகள் மூத்த குடிமக்களுக்கு சிகிச்சையளிப்பதும், உரிய கால அளவுகளில் ஆலோசனைக்கு திரும்ப வருமாறு அறிவுறுத்தி அவர்களை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைப்பதும் ஒரு இயல்பான நிகழ்வே. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கும் மற்றும் வீட்டில் சிறப்பு கவனிப்பும், பராமரிப்பும் தேவைப்படும் நிலைக்கு இடையே ஒரு குறிப்பிட்ட காலகட்டம் இருக்கிறது. மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குணமடைந்து இயல்பு நிலைக்கு மீண்டு வருவதற்கு இக்காலகட்டம் மிக இன்றியமையாததாகும். இந்த காலகட்டமே டிரான்ஸிஷன் கேர் (இடமாற்ற சிகிச்சை பராமரிப்பு) என அடையாளப்படுத்தப்படுகிறது அதுல்யா சீனியர் கேர் நிறுவனம்.

  ஒரு மருத்துவமனை அமைவிட சூழலிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கோ அல்லது வீட்டிற்கோ மாறும்போது தானாகவே சுதந்திரமாக இயங்கும் திறனை பெறவும் மற்றும் நோய்ப் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டெழவும் நோயாளிக்கு வழங்கப்படும் ஒரு குறுகிய கால சிறப்பு கவனிப்பு மற்றும் பராமரிப்பு.

  மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதற்குப் பிறகு, இயல்பு நிலைக்கு மீளவும் மற்றும் வழக்கமான செயல்பாட்டை மீண்டும் தொடரவும் ஒரு வயது முதிர்ந்த நபருக்கு கணிசமான காலம் தேவைப்படும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற அனுபவம் வழக்கமாகவே அதிர்ச்சி தரக்கூடியதாக இருப்பதால் சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் நேரடியாக வீட்டிற்கு போகும்போது, இயல்பு நிலைக்கு திரும்பும் காலஅளவு மேலும் நீடிக்கிறது; மருத்துவமனை சிகிச்சைக்குப் பிந்தைய மீட்சிக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ தேவைகளும் வீட்டில் இருக்கும்போது அவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.

  இதன் காரணமாகவே அறுவைசிகிச்சைக்குப் பிறகு அல்லது மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற்றதற்குப் பிறகு ஒரு முதியவரின் உடல்நல மேலாண்மை மற்றும் குணமடைந்து இயல்புநிலைக்கு திரும்ப வருவதற்கு ஒரு சிறப்பான மறுவாழ்வு பராமரிப்பு திட்டத்தை கட்டமைக்கும் அவசியத்தை முதியோர் நோய்களுக்கான மருத்துவ நிபுணர்கள் உணர்ந்தனர். இத்தகைய ஒரு கருத்தாக்கம் நம் நாட்டில் புதிதாக இருக்கின்ற போதிலும் மேற்கத்திய நாடுகளில் மிக பிரபலமானதாக இருக்கிறது.

  டிரான்ஸிஷன் கேர் என்பது சூழலில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள முதிர்ந்த வயதினருக்கு ஒரு குறிப்பிட்ட வகையிலான அமைவிடத்தையும், சூழலையும் வழங்குகிற ஒரு முழுமையான பராமரிப்பு சேவையாகும். மூத்த குடிமக்களை ஒரு தனிச்சிறப்பான, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய அமைவிடச் சூழலில் இருக்குமாறு செய்வது இச்சேவையில் ஒரு முக்கிய அம்சமாகும். நாட்பட்ட மற்றும் தீவிர நோய் நிலைக்கான மருத்துவ பராமரிப்பு, அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு, சிறுநீர் பிரச்சனைக்கான கதீட்டர் பயன்பாடு மற்றும் ஊசி மருந்துகள் செலுத்தல் தனிப்பட்ட உதவியுடன் முதியோருக்கான கவனிப்பு, ஆக்ஸிஜன் வழங்கல், நோய் அல்லது காயத்திலிருந்து மீண்டு குணமடைவதற்கு உதவி போன்ற மாறுபட்ட பல்வேறு உடல்நல பராமரிப்பு வசதிகளுக்கான அணுகுவசதியை தருகின்ற சூழலை இச்சேவை அமைத்து தருகிறது. வீடு போன்ற வசதி மற்றும் சூழலுக்குள் மேற்குறிப்பிடப்பட்ட சேவைகள் மற்றும் இன்னும் பல உதவிகள் வழங்கப்பெறுவதாக இது இருக்கும்.


  அதுல்யா சீனியர் கேர் நிறுவனர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி, திரு. சீனிவாசன் இது பற்றி கூறியதாவது:

  "மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றதற்குப் பிறகு சாத்தியமுள்ள மிக சவுகரியமான வழிமுறையில் ஒரு வயது முதிர்ந்த நபர் முழுமையாக குணமடைந்து மீள்வதற்கு உதவுகிற இந்த டிரான்ஸிஷன் கேர் சேவையை கண்டறிவது அதிக சிரமமானதல்ல. உதவப்படும் பராமரிப்பு வாழ்க்கை முறை மற்றும் உடல்நல சிகிச்சை மையங்களுள் பல, அவர்கள் வழங்கும் சேவைகள் பட்டியலில் இதனையும் இப்போது சேர்த்து வழங்குகின்றன. மூத்த குடிமக்கள் அவர்கள் வாழும் அமைவிடத்தில் நீண்டகால மற்றும் குறுகியகால பராமரிப்புக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடல்நல பராமரிப்பு திட்டங்கள் மற்றும் இது தொடர்பான சுகாதார அம்சங்களுடன் இந்த டிரான்ஸிஷன் கேர் சேவையை உதவப்படும் பராமரிப்பு வாழ்க்கைமுறை அமைவிடங்கள் / நிறுவனங்கள் வழங்குகின்றன.

  தனிப்பட்ட நபரின் தேவைகளை கருத்தில் கொள்ளும் இந்த அமைவிடங்கள், தனிப்பயனாக்கப்பட்ட செவிலியர் சேவை, உடல்நல மற்றும் உளவியல் சிகிச்சை மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை ஆகியவற்றின் வழியாக இந்த டிரான்ஸிஷன் கேர் சேவையை வழங்குகின்றன. இச்சேவை, எந்தவொரு குறிப்பிட்ட நோய்க்கு மட்டும் உரித்தானதல்ல; ஸ்ட்ரோக்/பக்கவாதம், முதுகுத்தண்டு காயங்கள், இதயப் பிரச்சனைகள், விபத்தில் ஏற்படும் மூளை காயங்கள், மனநல கோளாறுகள், இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டு மாற்று பிரச்சனைகள் போன்ற தீவிர பாதிப்புகள் உட்பட அனைத்து வகையான நோய் நிலைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் சிறப்பான உதவியை இச்சேவை வழங்குகிறது."

  சிறப்பம்சங்கள் மற்றும் சேவைகள்:

  * அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு

  * 24/7 செவிலியர் சேவைகள் மற்றும் அவசரநிலை சிகிச்சை

  * தினசரி/குறித்த கால அளவுகளில் கண்காணிப்பு மற்றும் முக்கிய சோதனைகள்

  * மறுவாழ்வு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள்

  * தீவிர சிகிச்சை பிரிவு சேவைகளை வழங்குதல்

  * மூத்த குடிமக்கள் வசிப்பதற்கு வாடகை அடிப்படையில் தங்குமிட வசதி

  * முதியோர்களுக்கு வீட்டிலேயே உடல்நல பராமரிப்பு சேவைகள்

  மூத்த குடிமக்களுக்கு உதவப்படும் வாழ்க்கை முறை மற்றும் வீட்டிலேயே உடல்நல பராமரிப்பு சேவைகள் வழங்கும் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய சேவை நிறுவனங்களுள் ஒன்றான அதுல்யா சீனியர் கேர், அரும்பாக்கம், நீலாங்கரை, பெருங்குடி மற்றும் பல்லாவரம் என சென்னை மாநகரில் நான்கு இடங்களில் இத்தகைய சேவை வழங்கல் மையங்களை நிர்வகித்து வருகிறது.

  விசாரணைகளுக்கு:

  தொலைபேசி +91 98849 45900

  மின்னஞ்சல்: enquiry@athulyaseniorcare.com

  Website: www.athulyaseniorcare.com

  YouTube: https://www.youtube.com/@AthulyaAssistedLiving

  Next Story
  ×