search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
    X

    திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்.

    திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.77அடியாக இருந்தது.
    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

    பாசன குளங்களும் நிரம்பி வழிந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் மழை குறைந்து இருந்த நிலையில் மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்தது. மழை குறைய தொடங்கியதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.பெருஞ்சாணி அணை கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் பாசனத்திற்காக அந்த அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.77அடியாக இருந்தது. அணைக்கு 793 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 257 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.65 அடியாக உள்ளது. அணைக்கு 1043 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 310 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    சிற்றார்-1- அணை நீர்மட்டம் 13.19 அடியாகவும், சிற்றாறு-2-அணை நீர்மட்டம் 13.28 அடியாகவும் உள்ளது. மழை குறைந்ததையடுத்து ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் குறைய தொடங்கி உள்ளது. திற்பரப்பு அருவியில் கடந்த சில நாட்களாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வந்த நிலையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    தற்பொழுது அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருவதால் மீண்டும் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை யடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×