search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தங்கம் விலை குறைந்தது- இன்றைய நிலவரம்
    X

    தங்கம் விலை குறைந்தது- இன்றைய நிலவரம்

    • சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.54,800-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி கடந்த பட்ஜெட்டில் 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தங்கம் விலை சரிவடைந்தது. 2 மாதங்களுக்கும் மேலாக விலை குறைந்திருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் பவுன் ரூ.55 ஆயிரத்தை எட்டுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.54,800-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.96-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×