என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
இனிமேல் இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை- பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேட்டி
- ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்தாலும் அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும்.
- நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
திருப்பூர்:
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சென்னை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் அ.தி.மு.க.வினர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அவை தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக தீர்ப்பு குறித்து திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கூறியதாவது:-
எத்தனையோ சோதனைகளை சந்தித்து, அ.தி.மு.க. என்றால் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை தீர்ப்பின் மூலம் காட்டியுள்ளார்கள்.அ.தி.மு.க. கொடி, அ.தி.மு.க.வின் 1.5 கோடி தொண்டர்கள் இனி எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம். வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இனி யாரும் கூக்குரல் இட முடியாது.புதிய தெம்போடு தி.மு.க.வை விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அ.தி.மு.க. ஆட்சியை அமைக்க மக்கள் தயாராவார்கள்.
தென்மாவட்டங்கள் எப்போதுமே அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளது. இப்பொழுதும் இப்படிதான் உள்ளது. இதுவே இறுதியான தீர்ப்பு தான். இனிமேல் இரட்டை தலைமை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. எப்பொழுதும் ஒற்றை தலைமைதான்.அ.தி.மு.க.வினர் மட்டும் எதிர்பார்த்த தீர்ப்பு அல்ல, நாட்டு மக்களும் எதிர்பார்த்த தீர்ப்பு.கட்சி இன்னார் தான் வழிகாட்ட வேண்டும் என நீதிமன்றம் சொன்ன பிறகும் சசிகலா கட்சி கொடியை கட்டிக்கொண்டு இருந்தால் அது தவறு தான். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க.விற்கு எதிராக இனி கடுமையாக அ.தி.மு.க. களத்தில் போராடும். இதுவரை தலைமை குழப்பில் இருந்த நிலையில் இனி எடப்பாடி பழனிசாமி தான் என்றபோது கடுமையாக போராடுவோம். தி.மு.க. லஞ்சம் ஊழலை கைவிட வேண்டும்.ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்தாலும் அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும்.
தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு அரணாக இருப்பார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திர சேகர்,பகுதிச் செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, ஹரிஹரசுதன், கே.பி.ஜி.மகேஷ்ராம், திலகர் நகர் சுப்பு ,பி. கே .முத்து,தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், நிர்வாகிகள் ஆண்டவர் பழனிச்சாமி, ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்