என் மலர்

  தமிழ்நாடு

  சாலி கிராமத்தில் விடுதியில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
  X

  சாலி கிராமத்தில் விடுதியில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மதுரவாயல் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரை விருகம்பாக்கம் தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சென்னை:

  சென்னை சாலிகிராமம் கங்கப்பா தெருவில் தமீம் அன்சாரி என்பவருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது.

  கடந்த 26-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் விடுதியின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

  இதில் அங்குள்ள வரவேற்பு அறை மேஜை தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

  இதுகுறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மதுரவாயல் பகுதியை சேர்ந்த வினோத் (37) என்பவரை விருகம்பாக்கம் தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

  வினோத் கடந்த 4 ஆண்டுகளாக தமீம் அன்சாரி விடுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வினோத்துக்கு ரூ. 3 லட்சம் வரை பணம் கொடுக்க வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்த தமீம் அன்சாரி வினோத்தை வேலையில் இருந்தும் நீக்கி உள்ளார்.

  இதில் ஏற்பட்ட தகராறில் வினோத் விடுதியில் பெட்ரோல் குண்டு வீசி இருப்பது தெரிந்தது. மேலும் பெண் தொடர்பான பிரச்சினையும் அவர்களுக்கு இடையே இருந்ததாக தெரிகிறது. இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே குற்றவழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×