என் மலர்

  தமிழ்நாடு

  இளம்பெண் மீதான தீராத ஏக்கத்தால் கற்பழித்து கொலை செய்தேன்- கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
  X

  இளம்பெண் மீதான தீராத ஏக்கத்தால் கற்பழித்து கொலை செய்தேன்- கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த சில நாட்களாக சுவிட்ச்ஆப் ஆகியிருந்த செல்போன், கடந்த 4 நாட்களுக்கு முன் ‘ஆன்’ ஆனது.
  • செல்போனை திருப்பத்தூர் நகரில் கோட்டை தெருவை சேர்ந்த ஒரு வாலிபர் பயன்படுத்தியது தெரியவந்தது.

  திருப்பத்தூர்:

  திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி அருகே உள்ள செல்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் பிரியா (வயது 22). இவரது பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர்.

  இதனால் சந்தோஷ்பிரியா, தனது தாத்தா சீனன் என்பவரிடம் வளர்ந்து வந்தார். தற்போது பிஎஸ்சி முடித்துவிட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

  இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அங்குள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். தகவலறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  பின்னர் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், சந்தோஷ் பிரியா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

  இதையடுத்து கந்திலி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் சந்தோஷ் பிரியா பயன்படுத்தி காணாமல் போன செல்போனின் ஐஎம்இஐ எண்ணை கொண்டு விசாரணை நடத்தினர்.

  அப்போது கடந்த சில நாட்களாக சுவிட்ச்ஆப் ஆகியிருந்த செல்போன், கடந்த 4 நாட்களுக்கு முன் 'ஆன்' ஆனது. அந்த செல்போனை திருப்பத்தூர் நகரில் கோட்டை தெருவை சேர்ந்த ஒரு வாலிபர் பயன்படுத்தியது தெரியவந்தது.

  அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது செல்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த கொரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் மகேந்திரன் (21) என்பவர் ரூ.5 ஆயிரத்துக்கு செல்போனை விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சந்தோஷ்பிரியாவின் வீட்டின் அருகே வசிக்கும் மகேந்திரன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

  அப்போது மகேந்திரன், சந்தோஷ் பிரியாவை பலாத்காரம் செய்து கழுத்து நெரித்து கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்தது.

  இதையடுத்து கந்திலி போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி, மகேந்திரனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

  கைதான மகேந்திரன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

  எனது பக்கத்து வீட்டை சேர்ந்த சந்தோஷ் பிரியாவை நான் ஒருதலையாக காதலித்து வந்தேன். எனது காதலை அவரிடம் கூறினேன். ஆனால் அவர் ஏற்கவில்லை.

  என்னை காதலிக்கும்படி பலமுறை வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் எனக்கு அவர் மீது தீராத ஏக்கம் இருந்தது.

  கடந்த ஜூலை 22-ந்தேதி இரவு சந்தோஷ் பிரியா தெருவில் தனியாக நடந்து வந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நான், அவரை பைக்கில் அமரும் படி கூறினேன். மேலும் என்னை காதலிக்கும்படி கூறினேன். ஆனால் அவர் பைக்கில் ஏற மறுத்து தான் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார்.

  இதனால் ஆத்திரமடைந்த நான், அவளை சரமாரி தாக்கி அருகில் உள்ள கம்புக்கொல்லையில் பலாத்காரம் செய்தேன்.

  பின்னர் கழுத்தை நெரித்துக்கொன்று விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் வீசிவிட்டேன். அவர் பயன்படுத்திய கைப்பையை புதரில் வீசிவிட்டேன். அவரது செல்போனை எடுத்துக் கொண்டேன்.

  போலீசார் சந்தோஷ் பிரியாவின் இறப்பை தற்கொலை வழக்காக பதிவு செய்ததால் எனக்கு தைரியம் வந்துவிட்டது. எனக்கு பணம் தேவைப்பட்டதால் சந்தோஷ் பிரியாவின் செல்போனை ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்துவிட்டேன்.

  அந்த செல்போன் மூலம் சிக்கிக்கொண்டேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×