search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாசாலையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தை மின் ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
    X

    அண்ணாசாலையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தை மின் ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

    • மின்ஊழியர்கள் அலுவலக வளாகத்தில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மின்சார உற்பத்தியை தனியாரிடம் கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் மின் வாரிய ஊழியர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மின்சார வாரிய தலைமை அலுவலகம் அமைந்துள்ள அண்ணாசாலையில் 1000-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.

    மின்வாரிய ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளை ரத்து செய்யும் மின் வாரிய ஆணை எண் 2-ஐ ரத்து செய்ய வேண்டும். மின்சார உற்பத்தியை தனியாரிடம் கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். நிலக்கரி கொள்முதல் அதிக விலைக்கு செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் நடந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். 100-க்கும் மேற்பட்ட பெண்கள், தொழிலாளர்கள் மின் வாரிய அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தடுப்புகளை மீறி வளாகத்திற்குள் நுழைய முயன்ற ஊழியர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டம் நடத்த அனுமதி தராததால் வாக்குவாதமும் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    போராட்டம் குறித்து ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சரிடம் ஏற்கனவே பேசினோம். 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதை ரத்து செய்ய வேண்டும். தனியாரிடம் ஒப்பந்தம் செய்து 7 ஆண்டுகள் வரை மின்சார வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது. புதிய பதவிகள் தேவை இருந்தால் மட்டுமே உருவாக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மின்ஊழியர்கள் அலுவலக வளாகத்தில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×