என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
பல்லாவரம், தாம்பரத்தில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்
- நன்மங்கலம் ஏரிக்கு சென்றடைய மழை நீர் கால்வாய் அமைக்க பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார்.
- மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள பாப்பன் கால்வாய் அடையார் ஆறு போன்றவற்றை ஆய்வு செய்தார்.
தாம்பரம்:
பருவமழை தொடங்கி உள்ள நிலையில் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் இருந்து செல்லும் மழை நீர் புத்தேரி வழியாக நன்மங்கலம் ஏரிக்கு சென்றடைய மழை நீர் கால்வாய் அமைக்க பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் தற்காலிக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார். மேலும் நன்மங்கலம் ஏரியிலிருந்து வெளியேறிம் உபரி நீர் கீழ்கட்டளை வழியாக நாராயணபுரம் ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாய் அகலப்படுத்துவதையும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சேலையூரில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால்வாய் பீர்க்கன் கரணை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் கால்வாய் பணி, இரும்புலியூர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கட்டன்கால்வாய் பணி, மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள பாப்பன் கால்வாய் அடையார் ஆறு போன்றவற்றை ஆய்வு செய்தார்.
அவர் ஆய்வு செய்த போது மாவட்ட வெள்ள தடுப்பு அதிகாரி ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் இயக்குனர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ. கருணாநிதி, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, கமலக் கண்ணன், ஆணையர் இளங்கோவன், செயற் பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.