search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    67 பதக்கங்கள் வென்ற பழங்குடியின மாணவ-மாணவிகள்: மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு வாழ்த்து தெரிவித்தார்
    X

    67 பதக்கங்கள் வென்ற பழங்குடியின மாணவ-மாணவிகள்: மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு வாழ்த்து தெரிவித்தார்

    • பதக்கங்கள் வென்ற பழங்குடியின மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
    • அரியலூர் மாவட்ட இருளர் இன பழங்குடியின மக்களுக்கு முந்திரி சேகரம் செய்து கொள்ளும் உரிமைக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆணைகளை வழங்கினார்.

    சென்னை:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மற்றும் விஜயவாடாவில் 17.12.2022 முதல் 22.12.2022 வரை நடைபெற்ற 3-வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் 22 மாநிலங்களைச் சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 177 பழங்குடியின மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்றனர். போட்டிகளில் இதுவரை காணாத வகையில் 10 தங்கம், 27 வெள்ளி மற்றும் 30 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களை வென்று தமிழ்நாடு 5-வது இடத்தை பெற்று சாதனை படைத்தது.

    பதக்கங்கள் வென்ற பழங்குடியின மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

    அரியலூர் மாவட்ட இருளர் இன பழங்குடியின மக்களுக்கு முந்திரி சேகரம் செய்து கொள்ளும் உரிமைக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆணைகளை வழங்கினார்.

    இதன்மூலம் 500 குடும்பங்களைச் சேர்ந்த 2000 இருளர் இன மக்கள் பயனடைவதோடு, முந்திரி தோட்டங்களில் தொழிலாளர்களாக பணிபுரிந்த இருளர் இன மக்கள் தற்போது தொழில் முனைவோர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×