என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
34 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு: தெற்கு ரெயில்வே தகவல்
- தண்டவாள சீரமைப்பு மற்றும் ரெயில்வே கட்டமைப்புகள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது.
- 34 ரெயில்களின் வேகம் 5 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை அதிகரிக்கப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் பாதுகாப்பான பயணம் மற்றும் விரைவு பயணத்திற்கு தெற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல, தண்டவாள சீரமைப்பு மற்றும் ரெயில்வே கட்டமைப்புகள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது.
அந்தவகையில், அக்டோபர் 1-ந்தேதி முதல் (இன்று) 34 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கப்பட உள்ளது. அதன்படி, கோவை-சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12244), விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் (16854), சென்ட்ரல்-நாகர்கோவில் (12689), தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் (11021), பாலக்காடு-திருச்செந்தூர் (16731), மதுரை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (16344), கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் (16721), ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் (16845), குருவாயூர்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (16341), கொல்லம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16824), சென்னை சென்ட்ரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ் (16053) உள்ளிட்ட 34 ரெயில்களின் வேகம் 5 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை அதிகரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.