என் மலர்

  தமிழ்நாடு

  நாகர்கோவிலில் ஜெயில் கைதிக்கு கொரோனா பாதிப்பு
  X

  நாகர்கோவிலில் ஜெயில் கைதிக்கு கொரோனா பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாவட்டம் முழுவதும் கொரோனா சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
  • ஜெயில் கைதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை.

  நாகர்கோவில்:

  குமரி மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. குறிப்பாக குருந்தன்கோடு, மேல்புறம் ஒன்றியங்களில் ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி, தக்கலை, தோவாளை ஒன்றிய பகுதிகளிலும் பாதிப்பு அதிகரித்தது. தினசரி பாதிப்பு 100 ஐ நெருங்கியதையடுத்து சோதனையை தீவிரபடுத்த கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார்.

  அதன்படி மாவட்டம் முழுவதும் கொரோனா சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 613 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள் ஆவார். 2 குழந்தைகளுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

  நாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் ஜெயிலில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயில் மூலமாக திமிங்கலத்தின் உமிழ் நீரை கடத்த முயன்றதாக வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 6 பேரை கைது செய்தனர். இதில் ஆசாரிபள்ளம் கீழ பெருவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் (வயது 42) என்பவரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதையடுத்து அவரை நாகர்கோவில் ஜெயிலில் இருந்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயில் கைதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

  Next Story
  ×