என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வால்பாறையில் கோவிலை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம்
- வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் புதுபாடி பகுதியில் பூமாரியம்மன் கோவில் உள்ளது.
- ஊருக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வரும் காட்டு யானைகளை ஊருக்குள் புகாமல் தடுக்க வேண்டும்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் புதுபாடி பகுதியில் பூமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அதிகாலை 3 காட்டு யானைகள் சேதப்படுத்தியது.
கோவிலின் சுற்று சுவரை இடித்து தள்ளி கருவறையில் இருந்த பொருட்களை வெளியே இழுத்துத் போட்டு சேதப்படுத்தியது.அந்த சத்தத்தை கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் யானைகளை அங்கிருந்து விரட்டினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து தூக்கமின்றி உள்ளனர். ஊருக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வரும் காட்டு யானைகளை ஊருக்குள் புகாமல் தடுக்க வேண்டும்.
அதற்கு வனத்துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமித்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி, கவுன்சிலர் அன்பரசன் ஆகியோர் சேதமடைந்த கோவிலை பார்வையிட்டார் .