search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுதந்திர தினத்தையொட்டி சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் கிராமிய கலைநிகழ்ச்சி
    X

    சுதந்திர தினத்தையொட்டி சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் கிராமிய கலைநிகழ்ச்சி

    • சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் நையாண்டி மேளம் போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    • கிராமியக் கலை நிகழ்ச்சிகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதிர்வேதி தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடிடும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் நையாண்டி மேளம் போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதிர்வேதி தொடங்கி வைக்கிறார்.

    நாளை (12-ந்தேதி) புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திலும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) அன்று விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்திலும், 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்திலும், 15-ந்தேதி (திங்கட்கிழமை) சுதந்திர தினத்தன்று அசோக் நகர் மெட்ரோ ரெயில் நிலையத்திலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    Next Story
    ×