search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழை வெள்ள சேதம்: விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்
    X

    மழை வெள்ள சேதம்: விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    • அதிகமான பாதிப்பிற்கு உள்ளான பகுதிகள் நாதல் படுகை, பில்படுகை மற்றும் முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், கிராமங்கள் ஆகும்.
    • தோட்ட பயிர்களான, மரவள்ளிகிழங்கு, முல்லை, மல்லி, சாமந்திபூ சாகுபடி செய்யப்படுகிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் அதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளநீர் புகுந்து பலநூறு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, காய்கறிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. கொள்ளிடம் அருகேயும், ஆற்றுப்படுகை அருகில் உள்ள மேலவாடி கிராமத்திலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.

    அதிகமான பாதிப்பிற்கு உள்ளான பகுதிகள் நாதல் படுகை, பில்படுகை மற்றும் முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், கிராமங்கள் ஆகும். இப்பகுதியில் தோட்ட பயிர்களான, மரவள்ளிகிழங்கு, முல்லை, மல்லி, சாமந்திபூ சாகுபடி செய்யப்படுகிறது. அவை தண்ணீரில் மூழ்கி முற்றிலும் அழுகிவிட்டது. மேலும் மாதர வேலூர் பகுதிகளில் செங்கல் காலவாய் தொழில் செய்து வருகின்றனர்.

    இங்கு 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளை தண்ணீர் சூழ்ந்து, சுடப்படாத செங்கல்கள் எல்லாம் நனைத்து கரைந்துபோய் அவர்களின் உழைப்பெல்லாம் வீணாகிவிட்டது. ஆகவே தமிழக அரசு உடனடியாக வெள்ளநீர் வடிந்தவுடன் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கும், செங்கல் உற்பத்தியாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் உரிய இழப்பீடுகளை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×