என் மலர்

  தமிழ்நாடு

  கொப்பரை தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை
  X

  ஜி.கே.வாசன்


  கொப்பரை தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொப்பரை தேங்காய் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தென்னை விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.

  சென்னை:

  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  தமிழகத்தில் தேங்காய் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யக் கூடிய ஒன்று. தமிழகத்தில் உற்பத்தியாகும் தேங்காயில் 75 சதவிகிதம் கொப்பரை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

  தமிழகத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை, சேலம், ஈரோடு, பல்லடம், திருப்பூர், போன்ற பகுதிகளில் அதிகமாக தேங்காய் உற்பத்தியாகிறது. கொப்பரை தேங்காய்யை தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலமாகவும், கிராம கூட்டறவு வங்கி, மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்கிறது.

  இவற்றை ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வதில்லை. மேலும் தற்பொழுது தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காயின் விலை மிகவும் சரிந்துள்ளது. இதனால் கொப்பரை தேங்காய் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  ஆகவே கொப்பரை தேங்காய் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய். 150-க்கும், உரித்த தேங்காய் கிலோ 1-க்கு ரூபாய் 50-ம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தென்னை விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.

  மேலும் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணையை வழங்க அரசு முன்வர வேண்டும். அதோடு நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒரு தேங்காயின் விலை ரூபாய். 12-ல்; இருந்து 8 ரூபாய்கு குறைந்துள்ளது. இது விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது. மத்திய அரசின் பாமாயில் எண்ணை, சூரியகாந்தி எண்ணை போற்றவையின் வரியில்லா இறக்குமதியே காரணம் என்று கூறப்படுகிறது.

  தென்னை விவசாயிகள் மற்றும் கொப்பரை தேங்காய் உற்பத்தியாளர்களின் நலன் கருதி, தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களை அரசே ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×