என் மலர்

  தமிழ்நாடு

  மதுரையில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
  X

  தற்கொலை முயற்சி செய்த முருகன்.

  மதுரையில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடன் தொல்லையால் விவசாயி ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் மதுரையில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

  அலங்காநல்லூர்:

  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தைகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 38). விவசாயியான இவர் குலமங்கலம் அருகே உள்ள கொய்யாத்தோப்பை குத்தகைக்கு எடுத்திருந்தார்.

  இதனால் அவர் கொய்யா தோப்பில் உள்ள வீட்டில் தனது மனைவி சுரேகா (35), மகள் லோகிதா (16), மகன் மோகனன் (11) ஆகியோருடன் தங்கி இருந்தார். லோகிதா மதுரையில் உள்ள மகளிர் பள்ளியில் 11-ம் வகுப்பும், சிறுவன் மோகனன் பாலமேட்டில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

  இந்நிலையில் நேற்று நள்ளிரவு முருகன் தனது மனைவி, மகள்-மகனை தோட்டத்தில் உள்ள கிணற்றுப்பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கிருந்து தனது உறவினர் ஒருவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

  அவரிடம் கிணற்றில் குதித்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், எங்களின் உடலை முறைப்படி அடக்கம் செய்து விடுங்கள் என்று கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

  இதுகுறித்து முருகனின் உறவினர் அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் பார்த்தபோது முருகனின் மனைவி, மகள், மகன் ஆகிய 3 பேரும் கிணற்றுக்குள் மிதந்தபடி பிணமாக கிடந்தனர்.

  முருகன் கிணற்றின் படிக்கில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்தார். அவரை போலீசார் உடனடியாக மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  முருகனின் மனைவி, மகள்-மகன் ஆகிய 3 பேரையும் மீட்க அலங்காநல்லூர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கிணற்றுக்குள் மூழ்கி கிடந்த 3 பேரின் உடலையும் மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக 3 பேரின் உடலும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த முருகன், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்ததும், அதில் அவரை தவிர 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்ததும், முருகன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதுதொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சமயநல்லூர் சரக டி.எஸ்.பி பாலசுந்தரமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  கடன் தொல்லை காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். முருகன் ஆஸ்பத்திரியில் மயக்க நிலையில் இருப்பதால் மயக்கம் தெளிந்ததும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×