என் மலர்

  தமிழ்நாடு

  நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயா்வு
  X

  நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயா்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம்.
  • முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

  நாமக்கல்:

  தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

  பிற மண்டலங்களில் முட்டை விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருவதாலும், ஆடி மாத கோவில் விழாக்கள் நிறைவடைந்துள்ளதாலும், வட மாநிலங்களுக்கு முட்டை அனுப்புவது தடையின்றி உள்ளதாலும் விலையில் இனி தொடா்ந்து மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

  அதனடிப்படையில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.4.50-ஆக நிா்ணயிக்கப்பட்டது. முட்டை விலை உயர்வு குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும்போது தமிழகத்தில் ஆடி மாதம் முடிவடையும் நிலையில் விற்பனை சற்று அதிகரித்து வருகிறது. அதேபோல தமிழகம், கேரளாவில் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முட்டை விலை மேலும் உயர வாய்ப்புகள் உள்ளது என்றனர்.

  பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ.91-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.110-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

  Next Story
  ×