search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கபடி போட்டியின் போது தகராறு: 2 கிராம மக்கள் திடீர் மோதல்
    X

    கபடி போட்டியின் போது தகராறு: 2 கிராம மக்கள் திடீர் மோதல்

    • விளங்குளத்தூர் அரசு பள்ளி அருகே இரு கிராமத்தினரும் மோதிக் கொண்டனர்.
    • இரு கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதுகுளத்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது விளங்குளத்தூர், கீழக்கன்னிச்சேரி கிராமங்கள். விளங்குளத்தூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. அப்போது 2 கிராம இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் ஒருவருக்கொரு வர் தாக்கிக் கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் விளங்குளத்தூரை சேர்ந்த கணேசன், அருண்குமார், தினேஷ்குமார் ஆகிய 3 பேரும் முதுகுளத்தூர் வந்துள்ளனர். அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே வந்த போது, கீழக்கன்னிச்சேரியை சேர்ந்த 5 பேர் கும்பல் வழிமறித்து தாக்கியது.

    இதேபோன்று கீழக் கன்னிச்சேரியை சேர்ந்த பிரகாசம் என்பவர் பஸ்சில் செல்லும்போது, விளங்குளத்தூரைச் சேர்ந்த 5 பேர் கும்பல் தாக்கியது. இதனால் 2 கிராமங்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இதற்கிடையே நேற்று காலை பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் உள்ள விளங்குளத்தூர் அரசு பள்ளி அருகே இரு கிராமத்தினரும் மோதிக் கொண்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட எஸ்பி பி.தங்கதுரை, முதுகுளத்தூர் டி.எஸ்.பி. தங்கதுரை, வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் போலீசார் 2 கிராம மக்களையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் அளித்த புகாரின்பேரில், இரு கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 கிராமங்களிலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×