என் மலர்

  தமிழ்நாடு

  உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற கல்லூரி மாணவி
  X

  உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற கல்லூரி மாணவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களை வைத்து பண மோசடி, பாலியல் ரீதியான தொல்லை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
  • தோழிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி விபச்சாரத்தில் தள்ள முயன்ற கல்லூரி மாணவியின் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உடுமலை:

  திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பிரபலமான கல்லூரி ஒன்று உள்ளது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவிகள் சிலர் தங்களது புகைப்படங்களை வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் 2பேரின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர்கள் விபச்சாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் 2பேரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது பற்றி தங்களுடன் படிக்கும் தோழிகளிடம் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தனர்.

  இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவிகளிடம் பேசிய நபர்கள் யார், இச்செயலில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று விசாரித்தனர். விசாரணையில் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ரம்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

  இதைத்தொடர்ந்து மாணவி ரம்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக உடன் படிக்கும் தோழிகளை விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதிக்க திட்டமிட்டது தெரியவந்தது.

  ரம்யாவுக்கு பல ஆண் நண்பர்கள் உள்ளனர். மேலும் கல்லூரியில் பல மாணவிகளிடம் சகஜமாக பழகியுள்ளார். அவர் பழகும் விதம் மாணவிகளுக்கு பிடித்தது. இதன் மூலம் மாணவிகள் பலர் ரம்யாவிடம் தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரம்யா, அங்கு படித்து வந்த சீனியர் மாணவிகள் 2பேரின் புகைப்படங்களை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்சில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை தனது ஆண் நண்பர்களுக்கு, மாணவிகளின் செல்போன் எண்களுடன் அனுப்பியுள்ளார். இதன் மூலம் மாணவிகள் 2பேரை ரம்யாவின் ஆண் நண்பர்கள் விபச்சாரத்திற்கு அழைத்துள்ளதுடன் விலையும் பேசியுள்ளனர்.

  இதற்காக ரம்யா ஆண் நண்பர்களிடம் முன்கூட்டியே பணமும் பெற்றுள்ளார். இதையடுத்து ரம்யாவின் செல்போனை கல்லூரி நிர்வாகத்தினர் கைப்பற்றி ஆய்வு செய்த போது நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளின் புகைப்படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

  இதையடுத்து ரம்யாவை கல்லூரியை விட்டு நீக்கியதுடன் அவரால் கல்லூரி மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்று கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இது பற்றி போலீசில் புகார் எதுவும் செய்யப்படவில்லை.

  ரம்யாவுடன் தொடர்பில் இருந்த ஆண்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? இதுவரை ரம்யாவால் அனுப்பப்பட்ட சக மாணவிகளின் புகைப்படங்கள் விபசார கும்பலிடம் உள்ளதா? என்று சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

  வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களை வைத்து பண மோசடி, பாலியல் ரீதியான தொல்லை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்தநிலையில் தோழிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி விபச்சாரத்தில் தள்ள முயன்ற கல்லூரி மாணவியின் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×