என் மலர்

  தமிழ்நாடு

  மாமல்லபுரம், செங்கல்பட்டில் மேலும் 2 புதிய பஸ் நிலையங்கள் விரைவில் அமைக்கப்படுகிறது
  X

  மாமல்லபுரம், செங்கல்பட்டில் மேலும் 2 புதிய பஸ் நிலையங்கள் விரைவில் அமைக்கப்படுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செங்கல்பட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட இருப்பதால் அங்கு போக்குவரத்து நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட உள்ளது.
  • புறநகர் பகுதிகளில் மேலும் 2 புதிய பஸ் நிலையங்கள் கட்டப்பட உள்ளதால் மாமல்லபுரம், செங்கல்பட்டில் போக்கு வரத்து நெருக்கடி விரைவில் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சென்னை:

  சென்னை புறநகர் பகுதியில் மாமல்லபுரம், செங்கல்பட்டில் மேலும் 2 புதிய பஸ் நிலையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.

  போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட புதிய பஸ்நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பஸ்நிலைய பணிகள் நிறைவடைந்ததும். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

  இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சி.எம்.டி.ஏ) சார்பில் புறநகர்ப் பகுதிகளான மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் மேலும் 2 புதிய பஸ் நிலையங்கள் அரசு, தனியார் பங்களிப்புடன் கட்டப்பட உள்ளது. புதிய பஸ் நிலையங்களுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு உள்ளது.

  மகாபலிபுரத்தில் புதிய பஸ் நிலையத்தில்வணிக அலுவலங்கள், கடைகள், நவீன பஸ் நிறுத்துமிடங்கள், கார், மோட்டார் சைக்கிள்நிறுத்துமிடங்கள், பஸ் டெப்போக்கள் மற்றும் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் ஆகியவை அமைகிறது. 22 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பஸ் முனையம் கட்டப்பட உள்ளது.

  செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள காலி இடத்தில் புதிய பஸ் நிலையம் விரைவில் கட்டப்பட உள்ளது. இதற்காக அங்கு உள்ள காலி நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. செங்கல்பட்டில் தற்போது உள்ள பஸ் நிலையம் (ரெயில் நிலையம் எதிரில்) நெருக்கடியான பகுதியில் அமைந்து இருப்பதால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

  எனவே செங்கல்பட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட இருப்பதால் அங்கு போக்குவரத்து நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட உள்ளது.

  நீண்ட தூரங்களுக்கு செல்லும் பஸ்கள் இந்த புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.

  புறநகர் பகுதிகளில் மேலும் 2 புதிய பஸ் நிலையங்கள் கட்டப்பட உள்ளதால் மாமல்லபுரம், செங்கல்பட்டில் போக்கு வரத்து நெருக்கடி விரைவில் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Next Story
  ×