என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு
- வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கிவிட்ட நிலையில் 2 வாரங்களுக்கு பின்னர் தற்போது தான் சற்று தீவிரம் அடைந்துள்ளது.
- கடந்த ஒரு வாரமாக மாஞ்சோலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
மாவட்டத்தில் மாநகர், புறநகர் மற்றும் அணை பகுதிகளில் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 88.75 அடியாக உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் சராசரியாக 2 நாட்களுக்கு ஒருமுறை 1 அடி உயர்ந்து வருகிறது. இன்று காலை வரை அந்த அணை பகுதியில் 39 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று 90 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து தற்போது அணையின் நீர் மட்டம் 93.44 அடியாக உயர்ந்துள்ளது.
இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 11971 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையில் 76.30 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 730 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கிவிட்ட நிலையில் 2 வாரங்களுக்கு பின்னர் தற்போது தான் சற்று தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக மழை பெய்தாலும், களக்காடு அருகே உள்ள வடக்கு பச்சையாறு அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது.
அந்த அணையின் நீர்கொள்ளளவு 49.20 என்ற நிலையில் தற்போது வரை 13.25 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதாவது 6.47 சதவீதம் மட்டுமே தற்போது அந்த அணையில் நீர் இருப்பு உள்ளது. இதேபோல் நம்பியாறு அணையில் 18.95 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
மாவட்டத்தில் நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, மூலக்கரைப்பட்டி, களக்காடு, சேரன்மகாதேவி, கன்னடியன் பகுதிகளிலும், மாநகரில் நெல்லை, பாளை உள்ளிட்ட இடங்களிலும் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக பாளையில் 29 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக மாஞ்சோலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்கு வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மாஞ்சோலை பகுதியில் மட்டும் 64 மில்லிமீட்டர் மழை பதிவானது.
நாலுமுக்கு பகுதியில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அங்கு 12.1 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. காக்காச்சியில் 85 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 62 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்