என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
18 மாவட்டங்களில் இயல்பைவிட 100 சதவீதத்துக்கு மேல் மழைப்பொழிவு- காரணம் என்ன?
- அதிகபட்சமாக தேனியில் 292 சதவீதம் அதிகம் மழை கிடைத்திருக்கிறது.
- தென்மேற்கு பருவமழை காலம் நிறைவுபெற இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.
சென்னை:
தமிழகம் ஆண்டு மழைப்பொழிவில் பெரும்பான்மையான மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் பெறும். அந்தவகையில் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தான் நீர்நிலைகள், விவசாய நிலங்கள் இருந்து வருகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக வரும், தென்மேற்கு பருவமழை காலத்தில் மழைப்பொழிவு அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டிலும் தென்மேற்கு பருவமழை காலம் நிறைவுபெற இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் தமிழகத்தில் இயல்பைவிட 88 சதவீதம் அதிகமாக பரவலாக மழை கிடைத்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகி இருப்பது வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கும் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
இந்த 18 மாவட்டங்களில் இயல்பைவிட 100 சதவீதத்துக்கும் அதிகமாக மழை பொழிந்துள்ளது. இதில் அதிகபட்சமாக தேனியில் 292 சதவீதம் அதிகம் மழை கிடைத்திருக்கிறது. 18 மாவட்டங்களில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு:- (அடைப்புக்குறிக்குள் இயல்பைவிட எவ்வளவு சதவீதம் அதிகம்)
கோவை-118.5 செ.மீ. (109 சதவீதம்), தர்மபுரி-47 செ.மீ. (110 சதவீதம்), திண்டுக்கல்-39 செ.மீ. (136 சதவீதம்), ஈரோடு-36 செ.மீ. (131 சதவீதம்), கரூர்-22 செ.மீ. (116 சதவீதம்), கிருஷ்ணகிரி-51 செ.மீ. (147 சதவீதம்), மதுரை-42 செ.மீ. (144 சதவீதம்), நாமக்கல்-41 செ.மீ. (105 சதவீதம்), நீலகிரி-170 செ.மீ. (155 சதவீதம்), பெரம்பலூர்-40 செ.மீ. (155 சதவீதம்), ராமநாதபுரம்-16 செ.மீ. (125 சதவீதம்), சிவகங்கை-51 செ.மீ. (146 சதவீதம்), தேனி-55 செ.மீ. (292 சதவீதம்), திருநெல்வேலி-11 செ.மீ. (104 சதவீதம்), திருப்பூர்-21 செ.மீ. (177 சதவீதம்), திருவாரூர்-40 செ.மீ. (113 சதவீதம்), தூத்துக்குடி-9 செ.மீ. (188 சதவீதம்), விருதுநகர்-24 செ.மீ. (128 சதவீதம்).
தென்மேற்கு பருவகாற்று, ஈரப்பதம் குவிதல், வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை பெய்து இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும், மற்ற மாவட்டங்களில் இயல்பைவிட சற்று அதிகமாகவும் மழை பதிவாகியிருப்பதும் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்