என் மலர்

  தமிழ்நாடு

  அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும்- வானிலை மையம் அறிவிப்பு
  X

  அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும்- வானிலை மையம் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
  • கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

  சென்னை:

  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையை காண முடிந்தது.

  குறிப்பாக அடையாறு, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, புறநகர் பகுதிகளான மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மேடவாக்கம் ஆகிய இடங்களில் சுமார் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

  இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

  அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழையும், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலும் மிதமான மழையும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  Next Story
  ×