என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஓணம் பண்டிகையொட்டி கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு பறக்கும் முறுக்கு, சீடை
- தொழில் நகரமான கோவையில் இருந்து, ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களாக ஏர் அரேபியா, ஏர்லைன்ஸ் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
- கடந்த சில நாட்களாக முறுக்கு, சீடை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் அதிகளவு புக்கிங் செய்யப்படுகின்றன.
கோவை:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் முறுக்கு, சீடை, எண்ணெய் பொருட்கள் அதிகளவில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.
தொழில் நகரமான கோவையில் இருந்து, ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களாக ஏர் அரேபியா, ஏர்லைன்ஸ் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.
இந்த விமானத்தில் ஒவ்வொரு முறையும், சராசரியாக 3 டன் சரக்குகள் ஏற்றி செல்லப்படுவது வழக்கம். பொதுவாக, காய்கறிகள் அதிகளவு புக்கிங் செய்யப்படும்.
ஆனால் கடந்த சில நாட்களாக முறுக்கு, சீடை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் அதிகளவு புக்கிங் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்படும் ஏர் அரேபியா விமானத்தில் கார்கோ பிரிவில் காய்கறிகள், என்ஜினீயரிங் பொருட்கள் மட்டுமே அதிகளவு ஏற்றி செல்லப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த சில நாட்களாக முறுக்கு, சீடை, முறுக்கு மாவு, தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மிக அதிகளவு புக்கிங் செய்யப்பட்டு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது.
குறிப்பாக முறுக்கு மாவு ஒவ்வொரு முறையும் 80 கிலோ மற்றும் அதற்கு மேல் கொண்டு செல்லப்படுகிறது. வரும் நாட்களில் பூக்களும் அதிகளவு புக்கிங் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த நிலவரம் ஓணம் பண்டிகை முடியும் வரை தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.