என் மலர்

  தமிழ்நாடு

  அதிமுக பொதுக்குழு வழக்குகளை விசாரிக்க புதிய நீதிபதி நியமனம்
  X

  அதிமுக தலைமை அலுவலகம்

  அதிமுக பொதுக்குழு வழக்குகளை விசாரிக்க புதிய நீதிபதி நியமனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரிய மனுவை திரும்ப பெறவேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார்.
  • வழக்குகளை புதிதாக விசாரிக்க நீதிபதியை நியமிக்க வேண்டும் என நீதிபதி பரிந்துரை

  சென்னை:

  சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளின் விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது.

  இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரிய மனுவை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன் மனுவாக தாக்கல் செய்ய ஓ.பி.எஸ் தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார்.

  பின்னர் நீதிமன்றம் கூடியபோது, மன்னிப்பு கோரியது தொடர்பாக மனு தாக்கல் செய்ய முடியாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நீதிபதியை மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கொடுத்த மனுவை திரும்பப் பெற்றது தொடர்பான மெமோவை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது.

  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஏற்கனவே இரண்டு முறை இந்த விவகாரத்தை விசாரித்து, கருத்தை வெளிப்படுத்தி, உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாக மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தின்படி, இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு வைப்பதே பொருத்தமானது எனக் கருதுவதால், இந்த வழக்குகளை புதிதாக விசாரிக்க நீதிபதியை நியமிக்கும் வகையில் வழக்குகளை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்கும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

  அவரது பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமித்துள்ளார். எனவே, இந்த வழக்குகள் விரைவில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Next Story
  ×