search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி வருகை எதிரொலி- கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் சீரமைக்கும் பணி தீவிரம்
    X

    கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளம் சீரமைக்கும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம்.


    மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி வருகை எதிரொலி- கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் சீரமைக்கும் பணி தீவிரம்

    • நடைபயணத்தின் தொடக்க விழா வருகிற 7-ந்தேதி மாலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடக்கிறது.
    • கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தேசிய ஒற்றுமை பயணம் என்ற நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

    இந்த நடைபயணத்தின் தொடக்க விழா வருகிற 7-ந்தேதி மாலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடக்கிறது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியுடன் ஒரே மேடையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டு பேசுகிறார்.

    மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்துகொண்டு பேசுகிறார்கள். கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை புறப்படும் ராகுல் காந்தி குமரி மாவட்டத்தில் களியக்காவிளை வரை 4 நாட்கள் 65 கிலோ மீட்டர்தூரம் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக ராகுல்காந்தி வருகிற 7-ந்தேதி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கு உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு தனது நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஹெலிகாப்டர் தளத்தை சுற்றி வளர்ந்து கிடக்கும் செடி, கொடிகள் மற்றும் புதர்களை பொக்லைன் எந்திரம் மற்றும் நவீன கருவிகள் மூலம் அகற்றும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஹெலிகாப்டர் தளம் சமப்படுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    இது தவிர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தங்குவதற்காக கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகமும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×