search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குட்கா விற்ற 75 கடைகளுக்கு சீல்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    X

    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    குட்கா விற்ற 75 கடைகளுக்கு சீல்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ரூ.9.19 கோடி மதிப்புள்ள 152.96 டன் குட்கா, பான்மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
    • குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபடும் சிறு வியாபாரிகளிடம் ரூ.2.88 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் கலந்துகொண்டு காணொலி மூலமாக உறுதிமொழி ஏற்றார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ரூ.9.19 கோடி மதிப்புள்ள 152.96 டன் குட்கா, பான்மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபடும் சிறு வியாபாரிகளிடம் ரூ.2.88 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    குட்கா, பான்மசாலா விற்பனை செய்த 75 கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு ஜூன் வரை சுமார் 1,308 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில், 1,093 மாதிரிகள் தரமற்றதாகவும், 136 மாதிரிகள் தரக்குறைவாக மற்றும் தவறான முத்திரைகள் இடப்பட்டதாக உள்ளது. இதுதொடர்பாக 686 குற்றவியல் வழக்குகளும், 107 உரிமையியல் வழக்குகளும் தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தால் ரூ.58.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×