என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக சரிவு
- மேட்டூர் அணைக்கு தொடர்ந்து 5-வது நாளான இன்று காலை நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக நீடித்தது.
- மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் நேற்று காலையும் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக நீடித்தது.
இதேபோல், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து 5-வது நாளான இன்று காலை நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக நீடித்தது. பின்னர் தண்ணீர் வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
அணை நிரம்பிய நிலையில், உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 25-வது நாளாக, அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.