என் மலர்

  தமிழ்நாடு

  மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 1 அடி சரிவு
  X

  மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 1 அடி சரிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
  • ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  மேட்டூர்:

  தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

  ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலையும் அதே அளவில் வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் ஆனந்தமாக குளித்தும், உற்சாகமாக குடும்பத்துடன் படகு சவாரி சென்றும் இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.

  ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 5 ஆயிரத்து 661 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 5 ஆயிரத்து 894 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்த விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

  நேற்று முன்தினம் 111.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மேலும் சரிந்து 110.77 அடியானது. இன்று மேலும் ½ அடி சரிந்து 110.20 அடியானது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு அடிக்கும் மேல் சரிந்துள்ளது குறிப்பிட தக்கது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

  Next Story
  ×