search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரையில் 2,000 கிலோ ரேசன் அரிசி கடத்தல்- லாரி டிரைவர் கைது
    X

    மதுரையில் 2,000 கிலோ ரேசன் அரிசி கடத்தல்- லாரி டிரைவர் கைது

    • மதுரை வன்னி வேலம்பட்டியில் ரேசன் அரிசி கடத்தல் கடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் லாரியை சோதனை செய்து பார்த்தபோது 2000 கிலோ ரேசன் அரிசி கடத்துவது தெரிய வந்தது.

    மதுரை:

    மதுரை வன்னி வேலம்பட்டியில் ரேசன் அரிசி கடத்தல் கடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மதுரை மண்டல ரேசன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் டி.கல்லுப்பட்டி ரோடு சந்திப்பில் வாகன தணிக்கை சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு ஒரு சரக்கு லாரி வந்தது. போலீசாரை கண்டதும் அதில் இருந்த 2 பேர் ஓடினர். உடனே போலீசார் அவர்களை விரட்டினர். இதில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பிவிட்டார்.

    தொடர்ந்து போலீசார் லாரியை சோதனை செய்து பார்த்தபோது 2000 கிலோ ரேசன் அரிசி கடத்துவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சரக்கு லாரியுடன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட நபரிடம் விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் அவர் மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ரஞ்சித்குமார் (வயது 30) என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரேசன் அரிசியை வாங்கி வெளி யூருக்கு லாரியில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

    Next Story
    ×