search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கோயம்பேடு மார்க்கெட்டில் கத்திரிக்காய், கேரட், பீன்ஸ் விலை கடும் வீழ்ச்சி
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் கத்திரிக்காய், கேரட், பீன்ஸ் விலை கடும் வீழ்ச்சி

    • பொங்கல் பண்டிகை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து இருந்தது.
    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி 54 லாரி, வெங்காயம் 45 லாரிகள் உள்பட இன்று 510 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    பொங்கல் பண்டிகை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து இருந்தது. இந்த நிலையில் பண்டிகை விடுமுறை முடிந்து விவசாய தொழிலாளர்கள் தற்போது முழு அளவில் பணிக்கு திரும்பிவிட்டனர். இதனால் காய்கறி உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது.

    மேலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரிக்காய், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்):-

    தக்காளி-ரூ.17, நாசிக் வெங்காயம்-ரூ.20, ஆந்திரா வெங்காயம்-ரூ.14, சின்ன வெங்காயம்-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.18, கோலார் உருளைக்கிழங்கு-ரூ.28, கத்தரிக்காய்-ரூ.15, வெண்டைக்காய்-ரூ.50, அவரைக்காய்-ரூ.20, பீன்ஸ்-ரூ.20, ஊட்டி கேரட்-ரூ.25, கேரட்-ரூ.15, ஊட்டி பீட்ரூ.ட்-ரூ.25, முட்டை கோஸ்-ரூ.8, முருங்கைக்காய்-ரூ.90, சவ்சவ்-ரூ.7, நூக்கல்-ரூ.15, புடலங்காய்-ரூ.20, வெள்ளரிக்காய்-ரூ.20, கொத்தவரங்காய்-ரூ.70, பட்டை கொத்த வரங்காய்-ரூ.50, சுரக்காய்-ரூ.15, பன்னீர் பாகற்காய்-ரூ.25, பீர்க்கங்காய்-ரூ.40, முள்ளங்கி-ரூ.10, காலி பிளவர் ஒன்று-ரூ.12, பச்சை மிளகாய்- ரூ.25.

    Next Story
    ×