search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை, திருப்பூர் உள்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    X

    வானிலை ஆய்வு மையம்

    கோவை, திருப்பூர் உள்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    • சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 9 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக விராலிமலையில் 8 செ.மீ., அணைப்பாளையம், திருவாரூர், பெரியகுளம், சின்னக்கல்லார், ஓசூரில் தலா 7 செ.மீ., அஞ்சட்டி, ஏற்காடில் தலா 6 செ.மீ., சிவகிரி, பாலக்கோடு, சின்கோனாவில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×