என் மலர்

  தமிழ்நாடு

  உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.5.43 கோடி செலவில் சைக்கிள்கள்- முதலமைச்சர் வழங்கினார்
  X

  உலமாக்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய முதலமைச்சர்

  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

  உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.5.43 கோடி செலவில் சைக்கிள்கள்- முதலமைச்சர் வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதலமைச்சர் 5 ஹஜ் பயணிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
  • 5 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் 10,583 உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விதமாக 3 உலமாக்களுக்கு முதலமைச்சர் மிதிவண்டிகளை வழங்கினார்.

  சென்னை:

  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், 5 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் 10,583 உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விதமாக 3 உலமாக்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

  மேலும், 2022-ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 ஹஜ் பயணிகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஹஜ் மானியத் தொகையாக நபர் ஒருவருக்கு ரூ.27,628/- வீதம், மொத்தம் 4.56 கோடி ரூபாய் வழங்கும் விதமாக, முதல்-அமைச்சர் 5 ஹஜ் பயணிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

  இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் - தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளர் மற்றும் செயல் அலுவலர் முகமது நசிமுத்தின், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, சிறுபான்மையினர் நல இயக்குநர் சீ.சுரேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×