search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    2026 சட்டசபை தேர்தல் வெற்றிக்காக கொக்குபோல பா.ஜனதா காத்திருக்கிறது: அண்ணாமலை
    X

    2026 சட்டசபை தேர்தல் வெற்றிக்காக கொக்குபோல பா.ஜனதா காத்திருக்கிறது: அண்ணாமலை

    • பெரியார் சிலையை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு உரிய மரியாதையுடன் நிறுவுவோம்.
    • வேங்கை வயல் விவகாரத்தில் 300 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. பொது இடத்தில் பெரியார் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் கோவில் முன்பு இருக்கக்கூடாது. பெரியார் சிலையை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு உரிய மரியாதையுடன் நிறுவுவோம்.

    அறநிலையத்துறை இருக்கக்கூடாது என்பதை பா.ஜனதா செயல்படுத்தும். ரூ.5,344 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வெற்றிக்காக கொக்குபோல பா.ஜனதா காத்திருக்கிறது. வேங்கை வயல் விவகாரத்தில் 300 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×