search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீண்டும் கொட்டிய கன மழை- சேலத்தில் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
    X

    சேலத்தில் பெய்த தொடர்மழை காரணமாக லீ-பஜார் ஓடை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரப்பர் படகு மூலம் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் காட்சி.

    மீண்டும் கொட்டிய கன மழை- சேலத்தில் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

    • சேலம் மாநகரில் நேற்று மாலை 5 மணியளவில் 1 மணி நேரம் கன மழை பெய்தது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை 8 மணி வரை ஓமலூரில் 99 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது.

    குறிப்பாக ஓமலூர், ஏற்காட்டில் மீண்டும் கன மழை கொட்டியது. ஓமலூரில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை கன மழையாக கொட்டியது. இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளிலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    இதே போல ஏற்காட்டிலும் நேற்று மாலை கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மலையில் புதிது புதிதாக அருவிகள் உருவாகி தண்ணீர் கொட்டியது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் புதிய அருவிகளில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    ஏற்காட்டிற்கு நேற்றிரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அஸ்தம்பட்டி அடிவாரம் வழியாக செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மீண்டும் இன்று காலை 5 மணி முதல் ஏற்காட்டிற்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

    சேலம் மாநகரில் நேற்று மாலை 5 மணியளவில் 1 மணி நேரம் கன மழை பெய்தது. இந்த மழையால் பல இடங்களில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது . மழையினால் பெரமனூர் கோவிந்த கவுண்டர் தோட்டம், அரிசி பாளையம், சாமிநாதபுரம்ஆ கிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதையடுத்து அந்த பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து சென்ற மேயர் ராமச்சந்திரன் அவர்களை சமாதானப்படுத்தியதுடன் ஓடையையும் தூர்வார உத்தரவிட்டார். அகிலாண்டஸே்வரி ஓடை பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 20-குடும்பங்களை ரப்பர் படகு மூலம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்டனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை 8 மணி வரை ஓமலூரில் 99 மி.மீ. மழை பதிவாகி உள்ளது . ஏற்காடு 66.4, சேலம் 23.8, ஆனைமடுவு 21, காடையாம்பட்டி 20, மேட்டூர் 16.2, கரிய கோவில் 13, பெத்தநாயக்கன் பாளையம் 8, எடப்பாடி 5.6, சங்ககிரி 4, ஆத்தூர் 4, தம்மமம்பட்டி 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 283 மி.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×