search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடல் சீற்றம் 5-வது நாளாக நீடிப்பு: 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
    X

    மின்கம்பம் முறிந்து கிடக்கும் காட்சி

    கடல் சீற்றம் 5-வது நாளாக நீடிப்பு: 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    • குமரி மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது.
    • மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததையடுத்து விசைப்படகுகள் மற்றும் கட்டுமரங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சூறைக்காற்று வீசி வருகிறது.

    மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. சாரல் மழையுடன் சூறைக்காற்று வீசியதால் நாகர்கோவில் கோட்டார் ரெயில்வே பகுதியில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்கம்பம் சாலையில் முறிந்து விழுந்ததையடுத்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து முறிந்து விழுந்த மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆரல்வாய்மொழி, குளச்சல், தக்கலை, திருவட்டார், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளிலும் சாரல் மழை இன்று பெய்துகொண்டே இருந்தது. சூறைக்காற்றும் வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன.

    குமரி மாவட்டத்தில் கடல் அலையின் சீற்றம் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பும் எனவும் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து இன்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பூத்துறை, வள்ளவிளை, தூத்தூர், ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால் பகுதிகளில் இன்று காலையில் ராட்சத அலைகள் எழும்பியது. இதனால் கடற்கரையை யொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதி சென்றன. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததையடுத்து விசைப்படகுகள் மற்றும் கட்டுமரங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். கன்னியாகுமரி, கோவளம், கீழமணக்குடி பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் சின்னமுட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×