search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழைநீர் தேங்கி நிற்பதை காணலாம்
    X
    மழைநீர் தேங்கி நிற்பதை காணலாம்

    ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழை- கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. பின்னர் 2 நாட்கள் மிதமான வெயில் அடித்தது. நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.

    நேற்றும் ஊட்டியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் நகரில் உள்ள சேரிங்கிராஸ், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் செல்லும் வழியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் சாலைகளில் வழிந்தோடியது.

    அங்கிருந்த சில கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் கடைக்காரர்களும், வாடிக்கையாளர்களும் அவதி அடைந்தனர்.

    தொடர் மழையால் ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மழையில் நனையாமல் இருக்க மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடையை பிடித்தபடி நடந்து சென்றனர்.

    இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவுகிறது.

    Next Story
    ×