என் மலர்

  தமிழ்நாடு

  முல்லை பெரியாறு அணை
  X
  முல்லை பெரியாறு அணை

  முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் சீராக உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வைகை அணையின் நீர்மட்டம் 66.98 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
  கூடலூர்:

  கோடை மழை கைகொடுத்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. நேற்று 777 கன அடி நீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 1319 கன அடி நீர் வருகிறது.

  அணையில் இருந்து தேனி மாவட்ட குடிநீருக்காக 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வழக்கமாக பாசனத்துக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது மழை அவ்வப்போது பெய்து வருகிறது. மேலும் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருவதால் திட்டமிட்டபடி முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் நிலங்களை உழுது பண்படுத்தி வருகின்றனர்.

  மேலும் நாற்றங்கால் அமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளனர். அணையின் நீர் மட்டம் 131.35 அடியாக உள்ளது.

  வைகை அணையின் நீர்மட்டம் 66.98 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 5 மாவட்ட விவசாய நிலங்கள் வைகை அணை மூலம் பாசன வசதி பெறுகிறது. மழை தொடரும் பட்சத்தில் பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் விரைவில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

  மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.40 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 99.87 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 2.3, தேக்கடி 4.4, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

  Next Story
  ×