search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
    X
    குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

    குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பிறந்தது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உயரம், எடை கண்காணிக்கும் சிறப்பு முகாம் நடந்தது.
    ஊட்டி:

    ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனை நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள முத்தொரை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று நடந்தது.

    இந்த திட்டத்தையும், முகாமையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார்.

    இந்த திட்டத்தின் நோக்கம் தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் ஆரோக்கியத்துடனும், நலமுடன் வளர்க்க வேண்டும் என்பதே ஆகும். ஊட்டியில் இன்று தொடங்கியுள்ள இந்த திட்டமானது தமிழகம் முழுவதும் ஒரு மாத காலத்திற்குள் செயல்படுத்தபட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் மருத்துவ உதவி தேவை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தனியாக பிரிக்கப்படுகிறது. அவர்களில் கடுமையான, மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை அளிப்பதுடன், சிறப்பு ஊட்டச்சத்தும் வழங்கப்படுகிறது. மருத்துவ உதவி தேவையானவர்களுக்கு தேவையான சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பிறந்தது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உயரம், எடை கண்காணிக்கும் சிறப்பு முகாம் நடந்தது.

    இதில் 37 லட்சம் குழந்தைகளை பரிசோதித்தில், 2 லட்சம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடனும், 7 லட்சம் பேர் மிதமான பாதிப்புடனும் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க ஊட்டச்சத்து வழங்கப்பட உள்ளது.
    Next Story
    ×