search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.
    X
    காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 4-வது நாளாக தடை விதித்து உள்ளது.
    பென்னாகரம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இதையடுத்து தற்போது காவிரி நீர்பிடிப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதன்காரணமாக இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 25 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருக்கிறது.

    ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 4-வது நாளாக தடை விதித்து உள்ளது.

    மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல், சத்திரம், ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார்கொட்டாய் மற்றும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரிசல்கள் கரையோரம் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×