என் மலர்

  தமிழ்நாடு

  பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா அடங்கிய மூட்டைகளையும், கைதானவர்களையும் காணலாம்
  X
  பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா அடங்கிய மூட்டைகளையும், கைதானவர்களையும் காணலாம்

  பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்த 3000 கிலோ குட்கா பறிமுதல்- சிறுவன் உட்பட 6 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை டி.ஐ.ஜி கயல்விழி பார்வையிட்டு, தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.
  தஞ்சாவூர்:

  தஞ்சாவூர் சரகத்தில் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்களான குட்கா, பான் மசாலா அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏடி.எஸ்.பி ஜெயச்சந்திரன் மேற்பார்வையிலான தனிப்படையினர் அமைக்கப்பட்டது.

  இந்நிலையில் இன்று காலை, தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது பெங்களூருவில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

  இதையடுத்து காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மேலவெளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிருந்தாவனம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து, குடோனில் இருந்த சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 3000 கிலோ அளவுடைய குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்களையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

  இது தொடர்பாக, பெங்களூருவைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது21), தஞ்சாவூரை சேர்ந்த பக்காராம்(48), முஹமத் பாருக் (35), பன்னீர்செல்வம்(40), முத்துப்பேட்டையை சேர்ந்த சோழாராம்(41) மற்றும் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

  கைது செய்யப்பட்டவர்களை தஞ்சாவூர் மேற்கு போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு விசாரித்து வருகிறார்.

  பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை டி.ஐ.ஜி கயல்விழி பார்வையிட்டு, தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

  Next Story
  ×